Recent Update

The Marry Celeste Unsolved Mysterie Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நாம் காணும் பதிவு தீர்க்கப்படாதமர்மமான  மேரி செலஸ்ட்
கப்பலை பற்றிதான் பார்க்கபேரம்.

சுமார் 148 ஆண்டுகளுக்கு முன்னால் யாருமே இல்லாத கப்பல் நடு கடலில் மிதந்துடு இருக்கு. அந்த கப்பலில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் எங்க போனார்கள் என்று தெரியவில்லை. 
இன்று வரை காணாமல் போனவர்கள் பற்றி ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. இது தான் உண்மை காணாமல் போனவர்களும்  இந்த  கப்பலும் மர்மம் ஆகவே பேச படுகிறது. 
அந்த கப்பலை பற்றிதான் இங்கு பார்க்க போகிறோம் வாருங்கள் பார்க்கலாம்

மேரி செலஸ்ட் 

கி. பி. 1872 டிசம்பர் 5 பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டேய் கிராட்டியா என்னும் கப்பல் அரோஸாஸ்  தீவு நீக்கி பயணம் செய்கின்றனர் இந்த பயணத்தில் கேப்டன் டேவிட் மோர்ஹவுஸ் இந்த 
கப்பல் ஆள் ஆரவாரமின்றி நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்ததை பார்கிறார்.
பொதுவாக கப்பலில் பயணிப்பவர்கள் வேறு ஒரு கப்பலைக் கண்டால் அந்த கப்பலுக்குத் தகவல் அனுப்பி அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள். அதன் பின்பே அந்த கப்பலின் அருகே செல்லவோ அல்லது மற்ற முயற்சிகளையோ மேற்கொள்வார்கள். அதன்படி தனியாக நின்ற கப்பலை ரேடியோ கதிர்கள் மூலம் தகவல் அனுப்பி தொடர்பு கோள்ள டேய் கிராவிட்டிய கப்பல் கேப்டன் டேவிட் முயற்சி செய்தபோது அந்த கப்பலிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முடிந்த வரை அந்த கப்பலை பைனாக்குலர் வைத்து பார்த்தபோது அந்த கப்பலில் ஆள் நடமாட்டமே இல்லை.
அதே நேரத்தில் அந்த கப்பலும் அசைவின்றி நின்றது. இதனால் டேவிட்டிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த கப்பலின் அருகே சென்று பார்த்தபோது அந்த கப்பலின் பெயர் மேரி செலஸ்ட் என்பது தெரியவந்தது. கப்பலுக்குள் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் கப்பலிலிருந்தவர்கள் இறந்திருக்கலாம். கடற்கொள்ளை போன்றே ஏதேனும் விவகாரம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் டேய் கிராட்டியா கப்பல் கேப்டன் டேவிட்டிற்கு ஏற்பட்டது. 
எனினும் துணிந்து மேரி செலஸ்ட் கப்பலுக்குள் சென்று பார்க்க முடிவு செய்து தன் கப்பலை அந்த கப்பலுக்கு அருகில் கொண்டு சென்றார். அதன் பின் கேப்டன் டேவிட் மற்றும் மாலுமிகள்  அந்த கப்பலுக்குள் சென்று பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. கப்பலுக்குள் யாரும் இல்லை. யாரும் செத்தும் கிடைக்கவில்லை. ஒரு உயிர் கூட கப்பலில் இல்லை. சுமார் 282 டன் எடை கொண்ட இந்த கப்பல் நடுக்கடலில் அனாதையாக நின்றுகொண்டிருந்தது. கப்பலிலிருந்த பொருட்கள் எல்லாம் வைத்திருந்த இடத்தில் சரியாக அப்படியே இருந்தன. இந்த கப்பலிலிருந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என யாருக்கும் தெரியவில்லை. 
அதே நேரத்தில் அந்த கப்பலிலிருந்து ஒரு படகு ஒன்று காணாமல் போயிருந்தது. அந்த படகில்தான் அவர்கள் தப்பி சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்தனர். மேலும் கப்பல் குறித்த வரைபடம் மற்றும் கப்பலில் இருக்கும் திசை காட்டும் கருவியும் இல்லை. இதனால் இந்த கப்பலிலிருந்தவர்கள் அந்த படகில்தான் தப்பிச் சென்றிருப்பார்கள் என தீர்மானிக்கபட்டது. ஆனால் கப்பலிலிருந்து அவர்கள் படகில் செல்ல என்ன காரணம் என்பதுதான் எல்லோருக்கும் குழப்பமான ஒரு விஷயம். அவர்கள் இருந்த கப்பலுக்கு எந்த வித ஆபத்தும் இருந்ததற்கான தடையங்கள் இல்லை. கப்பலில் எந்த விதமான சேதாரங்களும் இல்லை.சரி கப்பலிலிருந்தவர்களிடையே சண்டை ஏற்பட்டிருக்கலாம் என்றால் சண்டை நடந்த ஆதாரங்களும் இல்லை. கப்பல் தீ பிடித்திருக்கலாம் என்றால் அதற்கும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை.இந்த கப்பல் குறித்து அருகில் உள்ள துறைமுகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த கப்பல் குறித்து ஆய்வு செய்த போது இந்த கப்பல் அமெரிக்காவைச் சேர்ந்தது என்றும், அதன் கேப்டன் பெயர் பெஞ்சமின் பிரிக்ஸ் என்றும், தெரியவந்தது.
மேலும் இந்த கப்பல் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் என்றும் தெரியவந்தது.ஆனால் கப்பலில் பயணித்தவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் ஏன் கப்பலைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டும்? கப்பலில் பயணித்தவர்கள் எல்லாம் ஒரே லைஃப் படகில் எப்படித் தப்பிக்க முடியும் எனப் பல கேள்வி எழுந்தது. இந்த சம்பவத்திற்குப் பின்பு இதில் பயணித்தவர்கள் யாரையும் உயிருடனோ சடலமாகவோ கண்டுபிடிக்கவே முடியவில்லை. இன்று வரை அதற்குச் சரியான விடை கிடைக்கவில்லை என்றாலும் பல விதமாக தியரிகள் இதற்கு உள்ளன. அதைப் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.

ஊழியர்களிடையே சண்டை 

கப்பலில் சண்டை நடந்ததற்காக எந்த வித தடயங்களும் கிடைக்கவில்லை என்றாலும், சிலர் கப்பலிருந்த ஊழியர்களிடையே சண்டை நடந்திருக்கலாம் அதில் ஒரு குறிப்பிட்ட குழு மற்றவர்களைக் கொன்று கடலில் வீசிவிட்டு அவர்கள் மட்டும் படகில் தப்பிக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அவர்களும் பின்பு கடலில் முழ்கி இறந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

கடத்தல் 

இந்த கப்பல் கடத்தலுக்காகச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், நடுக்கடலில் கடத்தல் பொருட்களை கைமாற்றும் பணியை இது செய்து வந்திருக்கலாம் எனவும், கடத்தல் பொருட்களை கைமாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினையில் கடத்தல் காரர்கள் இந்த கப்பலில் இருந்தவர்களையும் சேர்த்து கடத்தி சென்றிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

ஆய்வுகள்

இந்த மேரி செலஸ்ட் கப்பல் குறித்து இன்றும் ஏராளமான ஆய்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இன்று வரை யாராலும் மேரி செலஸ்ட் கப்பலுக்கு என்ன நடந்தது? ஏன் அந்த கப்பல் நடுக்கடலில் யாரும் இன்றி தத்தளித்தது? கடலிருந்தவர்கள் எங்குச் சென்றார்கள் யாருக்குத் தெரியவில்லை? இந்த கப்பலுக்கு என்ன ஆகியிருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் கமெண்டில் சொல்லுங்கள்.

No comments